பாடல் 40
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
- தலம்
- திருச்செந்தூர்
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனதான
பாடல் வரிகள்
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரிசொலவொ ணாதம டந்தையர் சந்தனகளப சீதள கொங்கையில் அங்கையில்இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சனவிழியின் மோகித கந்தசு கந்தருகரிய ஓதியில் இந்துமு கந்தனில்மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின்அருள்தானே
அறியு மாறுபெ றும்படி அன்பினின்இனிய நாதசி லம்புபு லம்பிடும்அருண ஆடக கிண்கிணி தங்கியஅடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரிகவுரி நீலிப ரம்பரை அம்பிகைகுடிலை யோகினி சண்டினி குண்டலிஎமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரிவெகுவி தாகம சுந்தரி தந்தருள்குமர மூஷிக முந்திய ஐங்கரகணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகிஅணிக ஜானன விம்பனொர் அம்புலிமவுலி யானுறு சிந்தையு கந்தருள்இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்இடைவி டாது நெருங்கிய மங்கலமகிமை மாநகர் செந்திலில் வந்துறைபெருமாளே.
