பாடல் 375
கமரி மலர்குழல் சரிய புளகித
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனன தனதனதனன தனதன தனன தனதனதனன தனதன தனன தனதனதனதான
பாடல் வரிகள்
கமரி மலர்குழல் சரிய புளகிதகனக தனகிரி யசைய பொருவிழிகணைக ளெனநுதல் புரள துகிலதைநெகிழ்மாதர்
கரிய மணிபுர ளரிய கதிரொளிபரவ இணைகுழை யசைய நகைகதிர்கனக வளைகல நடைகள் பழகிகள்மயில்போலத்
திமிரு மதபுழு கொழுக தெருவினிலலைய விலைமுலை தெரிய மயல்கொடுதிலத மணிமுக அழகு சுழலிகளித்ழுறல்
திரையி லமதென கழைகள் பலசுளையெனவு மவர்மயல் தழுவு மசடனைதிருகு புலைகொலை கலிகள் சிதறிடஅருள்தாராய்
குமர குருபர குமர குருபரகுமர குருபர குமர குருபரகுமர குருபர குமர குருபரஎனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலிடமட டமடம டமட டமவெனகுமுற திமிலைச லரிகி னரிமுதலிவைபாட
அமரர் முநிவரு மயனு மனைவருமதுகை மலர்கொடு தொழுது பதமுறஅசுரர் பரிகரி யிரத முடைபடவிடும்வேலா
அகில புவனமொ டடைய வொளிபெறஅழகு சரண்மயில் புறம தருளியொரருண கிரிகுற மகளை மருவியபெருமாளே.
