பாடல் 374
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழிவனச மலதழல் முழுகிய சரமெனவிரைசெய் ம்ருகமத அளகமு முகிலலவொருஞான
விழியின் வழிகெட இருள்வதொ ரிருளெனமொழியு மமுதல வுயிர்கவர் வலையெனவிழையு மிளநகை தளவல களவெனவியனாபித்
தடமு மடுவல படுகுழி யெனஇடைதுடியு மலமத னுருவென வனமுலைசயில மலகொலை யமனென முலைமிசைபுரள்கோவை
தரள மணியல யமன்விடு கயிறெனமகளிர் மகளிரு மலபல வினைகொடுசமையு முருவென வுணர்வொடு புணர்வதுமொருநாளே
அடவி வனிதையர் தனதிரு பரிபுரசரண மலரடி மலர்கொடு வழிபடஅசல மிசைவிளை புனமதி லினிதுறைதனிமானும்
அமர ரரிவையு மிருபுடை யினும்வரமுகர முகபட கவளத வளகரஅசல மிசைவரு மபிநவ கலவியும்விளையாடுங்
கடக புளகித புயகிரி சமுகவிகடக கசரத துரகத நிசிசரர்கடக பயிரவ கயிரவ மலர்களும்எரிதீயுங்
கருக வொளிவிடு தனுபர கவுதமபுநித முநிதொழ அருணையி லறம்வளர்கருணை யுமைதரு சரவண சுரபதிபெருமாளே.
