உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 35

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனத்தந் தானன தானன தானனதனதான

பாடல் வரிகள்

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்உருட்டும் பார்வையர் மாபழி காரிகள்மதியாதே

உரைக்கும் வீரிகள் கோளர வாமெனவுடற்றுந் தாதியர் காசள வேமனம்உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள்புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடியணைத்துந் தானழ காய்நல மேதரஅருட்கண் பார்வையி னாலடி யார்தமைமகிழ்வோடே

அழைத்துஞ் சேதிகள் பேசிய காரணவடிப்பந் தானென வேயெனை நாடொறும்அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுடனினிதாள்வாய்

இருக்குங் காரண மீறிய வேதமும்இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்இடுக்கண் தீர்கன னேயடி யார்தவமுடன்மேவி

இலக்கந் தானென வேதொழ வேமகிழ்விருப்பங் கூர்தரு மாதியு மாயுலகிறுக்குந் தாதகி சூடிய வேணியனருள்பாலா

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்துதிக்குந் தாளுடைய நாயக னாகியசெகச்செஞ் சோதியு மாகிய மாதவன்மருகோனே

செழிக்குஞ் சாலியு மேகம ளாவியகருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →