பாடல் 34
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- கீரவாணி
- தாளம்
- அங்கதாளம் (6 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தனதனன தந்த தானதனதனதனன தந்த தானதனதனதனன தந்த தானதனதந்ததான
பாடல் வரிகள்
உததியறல் மொண்டு சூல்கொள்கருமுகிலெனஇ ருண்ட நீலமிகவொளிதிகழு மன்றல் ஓதிநரைபஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழிமிடைகடையொ துங்கு பீளைகளுமுடைதயிர்பி திர்ந்த தோஇதெனவெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடைசொருகுபிறை தந்த சூதுகளின்வடிவுதரு கும்ப மோதிவளர்கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்நிலைதனையு ணர்ந்து தாளிலுறுவழியடிமை யன்பு கூருமதுசிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்மணவறைபு குந்த நான்முகனும்எறிதிரைய லம்பு பாலுததிநஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்உமைமருவு சந்த்ர சேகரனும்இமையவர்வ ணங்கு வாசவனும்நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்அகிலசக அண்ட நாயகிதன்மகிழ்முலைசு ரந்த பாலமுதமுண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலைமுடுகிமைத வழ்ந்த வாய்பெருகிமுதலிவரு செந்தில் வாழ்வுதருதம்பிரானே.
