பாடல் 348
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதான தந்த தனதான தந்ததனதான தந்ததனதான
பாடல் வரிகள்
மயலோது மந்த நிலையாலும் வஞ்சவசைபேசு கின்றமொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்திமதிநேரு கின்றநுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்சநடையாலும் அங்கைவளையாலும்
அறிவே யழிந்து அயர்வாகி நைந்துஅடியேன் மயங்கிவிடலாமோ
மயிலேறி யன்று நொடி போதி லண்டம்வலமாக வந்தகுமரேசா
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்மலைமாது தந்தமுருகேசா
நயவா னுயர்ந்த மணிமாட மும்பர்நடுவே நிறைந்தமதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பைநகர்மீத மர்ந்தபெருமாளே.
