உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 347

மக்கட்குக் கூறரி தானது

ராகம்
லதாங்கி
தாளம்
திஸ்ர த்ருபுடை (7)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தத்தத் தானன தானனதத்தத்தத் தானன தானனதத்தத்தத் தானன தானனதனதான

பாடல் வரிகள்

மக்கட்குக் கூறரி தானதுகற்றெட்டத் தான்முடி யாததுமற்றொப்புக் கியாதுமொ வாததுமனதாலே

மட்டிட்டுத் தேடவோ ணாததுதத்வத்திற் கோவைப டாததுமத்தப்பொற் போதுப கீரதிமதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவியஅர்த்தக்குப் போதக மானதுமுத்திக்குக் காரண மானதுபெறலாகா

முட்டர்க்கெட் டாதது நான்மறையெட்டிற்றெட் டாதென வேவருமுற்பட்டப் பாலையி லாவதுபுரிவாயே

செக்கட்சக் ராயுத மாதுலன்மெச்சப்புற் போதுப டாவியதிக்குப்பொற் பூதர மேமுதல்வெருபம்

சிட்டித்துப் பூதப சாசுகள்கைக்கொட்டிட் டாடம கோததிசெற்றுக்ரச் சூரனை மார்பகமுதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடுசெச்சைக்கர்ப் பூரபு யாசலகச்சுற்றப் பாரப யோதரமுலையாள்முன்

கற்புத்தப் பாதுல கேழையுமொக்கப்பெற் றாள்விளை யாடியகச்சிக்கச் சாலையில் மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →