பாடல் 325
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத்தனதான
பாடல் வரிகள்
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்டெலுப்புக்கட் டளைச்சுற்றிச்சுவர்கோலி
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்கெனக்குச்சற் றுனக்குச்சற்றெனுமாசைக்
சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்திகைக்கப்பட் டவத்தைப்பட்டுழலாதுன்
திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித்திரிவேனோ
பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்பிறக்குற்றத் திருப்பக்கச்சிவநாதர்
பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்பிரசித்தக் கொடிக்குக்டக்கொடியோனே
பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்பலிக்குப்பச் சுடற்குத்திப்பகிர்வேலா
பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்படுக்கச்சிப் பதிச்சொக்கப்பெருமாளே.
