உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 324

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்

ராகம்
கமாஸ்
தாளம்
ஆதி - மிஸ்ரநடை (28)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

நடை - தகிட தகதிமிதனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத்தனதான

பாடல் வரிகள்

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்குடில்மாயம்

எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்பிறக்கைக்குத் தலத்திற்புக்கிடியாமுன்

தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்பெறச்செச்சைப் புயத்தொப்பித்தணிவோனே

செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்திரட்டப்பிக் கழற்செப்பத்திறல்தாராய்

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்பணத்துட்கக் கடற்றுட்கப்பொரும்வேலா

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்பலிப்பப்பத் தருக்கொப்பித்தருள்வாழ்வே

கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்கிடைப்புக்குக் களிப்புக்குத்திரிவோனே

கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்கடற்கச்சிப் பதிச்சொக்கப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →