உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 264

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தனத் தனத்த தனத்தனத்த தனத் தனத்த தனத்தனத்த தனத் தனத்த தனத்தனதான

பாடல் வரிகள்

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்கழுத்து மணித் தனப்பு ரளக்குவித்த விழிக் கயற்சு ழலப்பிறைபோலக்

குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி மயற் கொளுத்தி யிணைக்குழைச்செ வியிற் றழைப்ப பொறித்தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்குவட்டு முலைப் பளப்ப ளெனப்புனைத்த துகிற் பிடித்த இடைப்பொதுமாதர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்குலுக்கி லறப் பசப்பி மயற்புகட்டி தவத் தழிப்ப வருக்குறவாமோ

தலத்த நுவைக் குனித்தொ ருமுப்புரத்தை விழக் கொளுத்தி மழுத்தரித்து புலிக் கரித்து கிலைப்பரமாகத்

தரித்து தவச் சுரர்க்கண் முதற்பிழைக்க மிடற் றடக்கு விடச்சடைக்க டவுட் சிறக்க பொருட்பகர்வோனே

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக்கொளுத்தி மறைத் துதிக்க அதிற்செழிக்க அருட் கொடுத்த மணிக்கதிர்வேலா

தினைப்பு னமிற் குறத்தி மகட்டனத்தின் மயற் குளித்து மகிழ்த்திருத்த ணியிற் றரித்த புகழ்ப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →