பாடல் 263
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனத்தன தனன தனத்தனதனன தனத்தன தனன தனத்தனதனன தனத்தன தனன தனத்தனதனதான
பாடல் வரிகள்
குருவி யெனப்பல கழுகு நரித்திரள்அரிய வனத்திடை மிருக மெனப்புழுகுறவை யெனக்கரி மரமு மெனத்திரியுறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரிகுலைய னெனப்புலை கலிய னெனப்பலர்நகையாமல்
மருவு புயத்திடை பணிக ளணப்பலகரிபரி சுற்றிட கலைகள் தரித்தொருமதன சரக்கென கனக பலக்குடனதுதேடேன்
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்அமையு மெனக்கிட முனது பதச்சரண்மருவு திருப்புக ழருள எனக்கினியருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தனவிதமி திமித்திமி திமித திமித்திமிவிகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகுவெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலைநெறுநெ றெனத்திசை யதிர அடைத்திடமிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திடவிடும்வேலா
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்அயனை முடித்தலை யரியு மழுக்கையன்அகில மனைத்தையு முயிரு மளித்தவனருள்சேயே
அமண ருடற்கெட வசியி லழுத்திவிணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொடழகு திருத்தணி மலையில் நடித்தருள்பெருமாளே.
