உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 135

கலக வாள்விழி வேலோ சேலோ

தலம்
பழநி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனன தானன தானா தானாதனதான

பாடல் வரிகள்

கலக வாள்விழி வேலோ சேலோமதுர வாய்மொழி தேனோ பாலோகரிய வார்குழல் காரோ கானோதுவரோவாய்

களமு நீள்கமு கோதோள் வேயோஉதர மானது மாலேர் பாயோகளப வார்முலை மேரோ கோடோஇடைதானும்

இழைய தோமலர் வேதா வானோனெழுதி னானிலை யோவாய் பேசீரிதென மோனமி னாரே பா஡ணரெனமாதர்

இருகண் மாயையி ஧ல்முழ் காதேயுனது காவிய நூலா ராய்வேனிடர்ப டாதருள் வாழ்வே நீயேதரவேணும்

அலைவி லாதுயர் வானோ ரானோர்நிலைமை யேகுறி வேலா சீலாஅடியர் பாலரு ளீவாய் நீபார்மணிமார்பா

அழகு லாவுவி சாகா வாகாரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வாரயலு லாவிய சீலா கோலாகலவீரா

வலபை கேள்வர்பி னானாய் கானார்குறவர் மாதும னாளா நாளார்வனச மேல்வரு தேவா மூவாமயில்வாழ்வே

மதுர ஞானவி நோதா நாதாபழநி மேவுகு மாரா தீராமயுர வாகன தேவா வானோர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →