பாடல் 1325
உ ரையுஞ் சென்றது நாவும் உ லர்ந்தது
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி(எடுப்பு - 3/4 இடம்)தனனந் தந்தன தானன தந்தனதனனந் தந்தன தானன தந்தனதனனந் தந்தன தானன தந்தனதனதான
பாடல் வரிகள்
உ ரையுஞ் சென்றது நாவும் உ லர்ந்ததுவிழியும் பஞ்சுபொ லானது கண்டயல்உ ழலுஞ் சிந்துறு பால்கடை நின்றதுகடைவாயால்
ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்ததுமுறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்ததுஉ டலுந் தொந்தியும் ஓடிவ டிந்ததுபரிகாரி
வரவொன் றும்பலி யாதினி என்றன்பின்உ றவும் பெண்டிரு மோதிவி ழுந்தழமறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ....... ; யல்தோகை
மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புயவரைதுன் றுங்கடி மாலையும் இங்கிதவனமின் குஞ்சரிமாருடன் என்றன்முன்வருவாயே
அரிமைந் தன்புகழ் மாருதி என்றுளகவியின் சங்கமி ராகவ புங்கவன்அறிவுங் கண்டருள் வாயென அன்பொடுதரவேறுன்
அருளுங் கண்டத ராபதி வன்புறுவிஜயங் கொண்டெழு போதுபு லம்பியஅகமும் பைந்தொடி சீதமை றைந்திடவழிதோறும்
மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள்கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரிமணியின் பந்தெறி வாயிது பந்தெனமுதலான
மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண்முழுதுங் கண்டந ராயணன் அன்புறுமருகன் தென்புன வாயில மர்ந்தருள்பெருமாளே.
