பாடல் 1324
தங்க மிகுந்த முலைக்க டாமலை
- தலம்
- புதிய பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்த தனந்த தனத்த தானனதந்த தனந்த தனத்த தானனதந்த தனந்த தனத்த தானனதனதானா
பாடல் வரிகள்
தங்க மிகுந்த முலைக்க டாமலைபொங்க விரும்பிய முத்து மாலைகள்தங்க அணிந்து முறுக்கும் வேசியர்மொழியாலே
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒருமஞ்ச மிருந்து சுகிக்க வேவளர்சந்து சுகந்த முடித்து நூலிடைகிடையாடக்
கொங்கை குலுங்க வளைத்து வாயதரங்க ளருந்தி ருசிக்க வேமதகுங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயிலெனஓசை
கொண்ட வரிந்த விதத்தி னாடரசங்கி லிகொண்டு பிணித்து மாமயில்கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர்உ றவாமோ
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்வந்த துகண்டு பயப்ப டாதவர்சிந்தை நடுங்கி இருக்க வேமயில்மிசையேறிச்
சிங்க முகன்தலை வெட்டி மாமுகன்அங்க மறுந்து கிடக்க வேவருசிம்பு ளெனும்படி விட்ட வேலுளகுருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகிசங்கரிசுந்தரிஅத்தி யானனைமைந்த னெனும்படி பெற்ற ஈசுரிதருபாலா
மந்திர தந்திர முத்த யோகியர்அஞ்சலி செங்கை முடிக்க வேஅருள்வந்து தரும்படி நித்த மாடியபெருமாளே.
