பாடல் 129
கரிய பெரிய எருமை கடவு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனன தனன தனனதனன தனனதனதான
பாடல் வரிகள்
கரிய பெரிய எருமை கடவுகடிய கொடியதிரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்கழிய முடுகியெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமைதெரிய வரவியணுகாதே
செறிவு மறிவு முறவு மனையதிகழு மடிகள்தரவேணும்
பரிய வரையி னரிவை மருவுபரம ரருளுமுருகோனே
பழன முழவர் கொழுவி லெழுதுபழைய பழநியமர்வோனே
அரிய மயனும் வெருவ வுருவஅரிய கிரியையெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்அழகு முடையபெருமாளே.
