பாடல் 128
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2தனன தனத்த தாதத தனன தனத்த தானனதனன தனத்த தானனதனதான
பாடல் வரிகள்
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷணகனதன வெற்பு மேல்மிகுமயலான
கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகியகனதன மொத்த மேனியுமுகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்அரவு பிடித்த தோகையுமுலகேழும்
அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்அபிநவ பத்ம பாதமுமறவேனே
இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடுரணமுக சுத்த வீரியகுணமான
இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுறஇதமொ டளித்த ராகவன்மருகோனே
பதினொரு ருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகைபரிவோடு நிற்கு மீசுரசுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்பழநி மலைக்குள் மேவியபெருமாளே.
