பாடல் 1254
தென்றலு மன்றி யின்றலை பொங்கு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தன தந்த தந்தன தந்ததந்தன தந்ததனதான
பாடல் வரிகள்
தென்றலு மன்றி யின்றலை பொங்குதிண்கட லொன்றுமிகமோதச்
செந்தழ லென்று வெந்தழல் சிந்துதிங்களும் வந்துதுணையேய
அன்றிலு மன்றி துன்றுச ரங்களைந்துமெ னெஞ்சமழியாதே
அந்தியி லென்றன் வெந்துய ரஞ்சஅன்பொட லங்கல்தரவேணும்
வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சிவிஞ்சிய கொங்கைபுணர்மார்பா
வெண்டர ளங்கள் தண்டைச தங்கைமின்கொடி லங்குகழலோனே
கொன்றைய ணிந்த சங்கர ரன்றுகும்பிட வந்தகுமரேசா
குன்றிட அண்ட ரன்றுய வென்றுகுன்றமெ றிந்தபெருமாளே.
