பாடல் 1253
தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தத்த தய்ய தனன தத்த தய்யதனன தத்த தய்யதனதான
பாடல் வரிகள்
தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மைதெரிவ தற்கு உ ள்ளமுணராமுன்
சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்யசிலுகு தைத்து வன்மைசிதையாமுன்
பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகுபரம னுக்கு நல்லமருகோனே
பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மைபகர்வ தற்கு நன்மைதருவாயே
இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னுமிடியு மொய்த்த தென்னஎழுசூரை
எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணுளிமைய வர்க்கு வன்மைதருவோனே
அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மையரறிய மிக்க வுண்மையருள்வோனே
அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்லஅடிய வர்க்கு நல்லபெருமாளே.
