உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1171

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதத்தத் தத்தத் தனதனதனதத்தத் தத்தத் தனதனதனதத்தத் தத்தத் தனதனதனதான

பாடல் வரிகள்

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடுநவரத்நப் பத்தித் தொடைநகநுதிபட்டிட் டற்றுச் சிதறிட ....... ; த்ழுறல்

பருகித்தித் திக்கப் படுமொழிபதறக்கைப் பத்மத் தொளிவளைவதறிச்சத் திக்கப் புளகிததனபாரம்

அகலத்திற் றைக்கப் பரிமளஅமளிக்குட் கிக்கிச் சிறுகெனஇறுகக்கைப் பற்றித் தழுவியஅநுராக

அவசத்திற் சித்தத் தறிவையுமிகவைத்துப் பொற்றித் தெரிவையர்வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழுதுணர்வேனோ

இகல்வெற்றிச் சத்திக் கிரணமுமுரணிர்த்தப் பச்சைப் புரவியுமிரவிக்கைக் குக்டத் துவசமுமறமாதும்

இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடுகவிமெத்தச் செப்பிப் பழுதறஎழுதிக்கற் பித்துத் திரிபவர்பெருவாழ்வே

புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறுகலகச்செற் றச்சட் சமயிகள்புகலற்குப் பற்றற் கரியதொருபதேசப்

பொருளைப்புட் பித்துக் குருபரனெனமுக்கட் செக்கர்ச் சடைமதிபுனையப்பர்க் கொப்பித் தருளியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →