பாடல் 1170
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- நவரஸ கண்டை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)தான தந்த தான தான தான தந்த தான தானதான தந்த தான தானதனதான
பாடல் வரிகள்
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடுநீளு மங்க மாகி மாயவுயருறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவிநீதி யொன்று பால னாகியழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாதரோடு சிந்தை வேடை கூரஉ றவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீசஊனு டம்பு மாயு மாயமொழியாதோ
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாதுதோகை யின்கண் மேவி வேலைவிடும்வீரா
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடுதோகை பங்க ரோடு சூதுமொழிவோனே
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்பாடல் கண்டு ஏகு மாலின்மருகோனே
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மைபாடு மன்பர் வாழ்வ தானபெருமாளே.
