பாடல் 1116
உ ற்பா தப்பூ தக்கா யத்தே
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
பாடல் வரிகள்
உ ற்பா தப்பூ தக்கா யத்தேயொத்தோ டித்தத்தியல்காலை
உ ட்பூ ரித்தே சற்றே சற்றேயுக்கா ரித்தற்புதனேரும்
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போலப்பா வித்துத்திரிவேனுக்
கப்பா சத்தா லெட்டா அப்பாலைப்போ தத்தைப்புரிவாயே
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்காகப்போய் முட்டிக்கிரிசாடிப்
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்பொட்டா கக்குத்தியவேலா
முற்பா டப்பா டற்றா ருக்கோர்முட்கா டற்கப்பொருளீவாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
