உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1115

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததனதத்தனத் தத்ததனதனதான

பாடல் வரிகள்

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்மற்றுமுற் றக்குரவரனைவோரும்

வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியுமட்டுமற் றுப்பெருகுமடியாரும்

புக்குதுக் தித்தெரிகள் தத்தவைக் கப்புகுதுபொய்க்குமெய்க் குச்செயலுமுருகாதே

புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவுபுத்திமெத் தத்தருவதொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகுசெக்கமுற் றச்சலமுமதிசூடி

சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழுசித்தமுத் திச்சிவமுமருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரைகொத்தினொக் கக்கொலைசெய்வடிவேலா

கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிதுகுத்திவெட் டிப்பொருதபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →