பாடல் 1076
புழுககில் களப மொளிவிடு தரள
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனன தனதன தனனதனதன தனனதனதான
பாடல் வரிகள்
புழுககில் களப மொளிவிடு தரளமணிபல செறியவடமேருப்
பொருமிரு கலச முலையினை யரிவைபுனையிடு பொதுவின்மடமாதர்
அழகிய குவளை விழியினு மமுதமொழியினு மவசவநுராக
அமளியின் மிசையி லவர்வச முருகிஅழியுநி னடிமைதனையாள்வாய்
குழலிசை யதுகொ டறவெருள் சுரபிகுறுநிரை தருளியலைமோதுங்
குரைசெறி யுததி வரைதனில் விறுசுகுமுகுமு குமெனவுலகோடு
முழுமதி சுழல வரைநெறு நெறெனமுடுகிய முகிலின்மருகோனே
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவுமுளரியின் முதல்வர்பெருமாளே.
