பாடல் 1075
திரிபுர மதனை யொருநொடி யதனி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- தர்பாரிகானடா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனன தனதன தனனதனதன தனனதனதான
பாடல் வரிகள்
திரிபுர மதனை யொருநொடி யதனிலெரிசெய்த ருளியசிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவமயிலது முடுகிவிடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியுமறுமுக முடையவடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளைமதன்விடு பகழிதொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறுமுடையவர் பிறகுவருவொனே
கனதன முடைய குறவர்த மகளைகருணையொ டணையுமணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருகஅவனியு முழுதுமுடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயருமறஅரு ளுதவுபெருமாளே.
