பாடல் 1060
(முதல் லகு)
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஸஹானா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரஅட (18) (17 17 00)
பாடல் வரிகள்
(முதல் லகு)தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்பாராய் வானாய் நீர்தீ காலாயுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதினாலா றேழா மேனா ளாயேழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுடராய்வே தாவாய் மாலாய் மேலேசிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்சூடா நாடா ஈடே றாதேசுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்சேணா டாள்வா னாளோர் மூவாறினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்சீரா மாறே த்ருர் கோமான்மருகோனே
குருதி வேற்கர நிருத ராஷதகோபா நீபா குதா ளாமாமயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்கோவே தேவே வேளே வானோர்பெருமாளே.
