பாடல் 1059
(முதல் லகு)
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- பாகேஸ்ரீ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரஅட (18) (/7/7 00)தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
பாடல் வரிகள்
(முதல் லகு)
தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான
கவடு கோத்தெழு முவரிமாத்திறல்காய்வேல் பாடே னாடேன் வீடானதுகூட
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பனகால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீதினும்வீழேன்
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்தாழா தீயேன் வாழா தேசாவதுசாலத்
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைசதாவா மாறே நீதா னாதாபுரிவாயே
சுவடு பார்த்தட வருக ராத்தலைதூளா மாறே தானா நாராயணனேநற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பதுழாய்மார் பாகோ பாலா காவாயெனவேகைக்
குவடு கூப்பிட வுவண மேற்கனகேர்டு தாவா னேபோ தாள்வான்மருகோனே
குலிச பார்த்திப னுலகு காத்தருள்கோவே தேவே வேளே வானோர்பெருமாளே.
