பாடல் 964
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) /4 யு 0தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தனதான தானத் தனதான தனதான தானத்தனதான
பாடல் வரிகள்
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக்கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத்தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனைமேவு வாலக்குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற்பெருமாளே.
