பாடல் 96
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- மனோலயம்
- தாளம்
- ஆதி - 2 களை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தத் தனதன தந்தத் தனதனதந்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினைவஞ்சிக் கொடியிடைமடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞருமண்டிக் கதறிடுவகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்அங்கிக் கிரையெனவுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்அன்றைக் கடியிணைதரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்துகன்றச் சிறையிடுமயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்கண்டத் தழகியதிருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரிசெந்திற் பதிநகருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடைசிந்தப் பொரவலபெருமாளே.
