பாடல் 97
வந்து வந்து முன்த வழ்ந்து
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- சிந்து பைரவி
- தாளம்
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
வந்து வந்து முன்த வழ்ந்துவெஞ்சு கந்த யங்க நின்றுமொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்குழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்விண்ட லம்பி ளந்தெ ழுந்தசெம்பொன் மண்ட பங்க ளும்பயின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்தழைந்து குங்கு மந்த யங்குகொங்கை வஞ்சி தஞ்ச மென்றுமங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்குபைங்க டம்பு தண்டை கொஞ்சுசெஞ்ச தங்கை தங்கு பங்கயங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்புமந்த ரஞ்செ ழுங்க ரும்புகந்த ரம்பை செண்ப தங்கொள்செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்றுபண்க டங்க டர்ந்த இன்சொல்திண்பு னம்பு குந்து கண்டிறைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்தகந்த ரங்க லந்த சிந்துரஞ்சி றந்து வந்த லம்புரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்சம்பு நன்பு ரந்த ரன்தரம்ப லும்பர் கும்பர் நம்புதம்பிரானே.
