பாடல் 952
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்
- தலம்
- கீரனூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதனதான
பாடல் வரிகள்
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்நாத கீதந டிப்பிலு ருக்கவும்ஏவ ராயினு மெத்திய ழைக்கவுமதராஜன்
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்வீதி மீதுத லைக்கடை நிற்கவும்ஏறு மாறும னத்தினி னைக்கவும்விலைகூறி
ஆர பாரத னத்தைய சைக்கவுமாலை யோதிகு லைத்துமு டிக்கவும்ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும்அதிமோக
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவுமேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்ஆன தோதக வித்தைகள் கற்பவருறவாமோ
பார மேருப ருப்பத மத்தெனநேரி தாகஎ டுத்துட னட்டுமைபாக ராரப டப்பணி சுற்றிடுகயிறாகப்
பாதி வாலிபி டித்திட மற்றொருபாதி தேவர்பி டித்திட லக்ஷ¤மிபாரி சாதமு தற்பல சித்திகள்வருமாறு
கீர வாரிதி யைக்கடை வித்ததிகாரி யாயமு தத்தைய ளித்தக்ருபாளு வாகிய பச்சுரு வச்சுதன்மருகோனே
கேடி லாவள கைப்பதி யிற்பலமாட கூடம லர்ப்பொழில் சுற்றியகீர னுருறை சத்தித ரித்தருள்பெருமாளே.
