உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 951

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்தனதனனந் தத்தத்தனதான

பாடல் வரிகள்

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்கடனபயம் பட்டுக்கசடாகுங்

கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்கலகலெனுங் கொட்புற்றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்றரவியிடந் தப்பிக்குறியாத

அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்றருள்வசனங் கிட்டப்பெறலாமோ

கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்கொடிமருவுஞ் செச்சைபுயமார்பா

கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்குரைகடல்செம் பச்சக்கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்திசைகளினுந் தத்தச்செகமேழுந்

திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்திறல கொடும் பைக்குட்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →