பாடல் 941
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
- தலம்
- பட்டாலியூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதனதந்தத்தத் தான தனதனதனதான
பாடல் வரிகள்
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்சங்கற்பித் தோதும் வெகுவிதகலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்சம்பத்துக் கேள்வி யலமலமிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடிவந்திக்கப் பேசி யருளியசிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்வம்பிற்சுற் றாது பரகதியருள்வாயே
வெங்கைச்சுக் ¡£பர் படையையி லங்கைக்குப் போக விடவலவென்றிச்சக் ரேசன் மிகமகிழ்மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்விஞ்சிட்டுச் சூழ வெயில்மறைவயலு¡ரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்கொண்டைக்கொப் பாகு முகிலெனவனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவகொங்கிற்பட் டாலி நகருறைபெருமாளே.
