பாடல் 937
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்ததன தந்த தந்ததன தந்ததந்ததன தந்ததனதான
பாடல் வரிகள்
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்றதண்குவளை யுந்துகுழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்றசண்டவித கும்பகிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்துநம்பிவிட நங்கையுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்றுநன்றுமயில் துன்றிவரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சிகந்திகமழ் கின்றகதிர்வேலா
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்கண்டுபொரு கின்றகதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கைதிண்குயம ணைந்ததிருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்தசிங்கையில மர்ந்தபெருமாளே.
