பாடல் 938
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்ததன தான தந்ததன தானதந்ததன தானதனதான
பாடல் வரிகள்
சந்திதொறு நாண மின்றியகம் வாடிஉ ந்திபொரு ளாகஅலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்தங்கள்வச மாகிஅலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேகசிந்தைகளி கூரஅருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்மங்கைரண காளிதலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதிஎன்றுநட மாடுமவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதைமங்களம தாகஅணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாளஅந்தமுனை வேல்கொடெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேலசிங்கைநகர் மேவுபெருமாளே.
