பாடல் 931
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
- ராகம்
- சுத்த தன்யாஸி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3தந்தனாத் தானத்தனதான
பாடல் வரிகள்
வண்டுபோற் சாரத்தருள்தேடி
மந்திபோற்ள காலப்பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித்தருள்வாயே
தொண்டராற் காணப்பெறுவோனே
துங்கவேற் கானத்துறைவோனே
மிண்டராற் காணக்கிடையானே
வெஞ்சமாக் கூடற்பெருமாளே.
