பாடல் 932
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
- ராகம்
- மாண்ட்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2தனதனத் தனனத்தனதான
பாடல் வரிகள்
இருவினைப் பிறவிக்கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப்புகுதாதே
திருவருட் கருணைப்ப்ரபையாலே
திரமெனக் கதியைப்பெறுவேனோ
அரியயற் கறிதற்கரியானே
அடியவர்க் கெளியற்புதநேயா
குருவெனச் சிவனுக்கருள்போதா
கொடுமுடிக் குமரப்பெருமாளே.
