பாடல் 908
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம்தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
குருதி கிருமிகள் சலமல மயிர்தசைமருவு முருவமு மலமல மழகொடுகுலவு பலபணி பரிமள மறசுவைமடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமலமனைவி மகவனை யநுசர்கள் முறைமுறைகுனகு கிளைஞர்க ளிவர்களு மலமலமொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினியுலக கலைகளு மலமல மிலகியதொலைவி லுனைநினை பவருற வலதினியயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடுமுறவு மலமல மருளலை கடல்கழிதுறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுறஅருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவெனமுகுற ககபதி முகில்திகழ் முகடதில்விகட இறகுகள் பறையிட அலகைகள்நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணெனவிரவு கதிர்முதி ரிமகரன் வலம்வரவினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும்வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபடவுருளு முரலொடு தவழரி மருகசெவனச மலர்சுனை புலிநுழை முழையுடையவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபரகயலு மயிலையு மகரமு முகள்செநெல்வயலி நகரியி லிறையவ அருள்தருபெருமாளே.
