பாடல் 909
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
- தலம்
- வயலு¡ர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதானன தனதானன தனதானன தனதானனதனதானன தனதானனதந்ததான
பாடல் வரிகள்
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடைகுறியீர்தனி செறியீரினியென்றுபாடிக்
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடைகுலையாவல்கு லளையாவிருகொங்கைமீதிற்
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்பகையேயென நினையாதுறநண்புகூரும்
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகரபதிநேருநி னருளால் மெயுணர்ந்திடேனோ
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசனவிசையேழ்பரி ரவிசேயெனுமங்கராசன்
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்விதிதேடிய திருவாளியரன்குமாரா
அயலு¡ருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களையகிலாரம தெறிகாவிரிவண்டல்மேவும்
அதிமோகர வயலு¡ர்மிசை திரிசேவக முருகேசுரஅமராபதி யதில்வாழ்பவர்தம்பிரானே.
