பாடல் 892
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
- தலம்
- நெடுங்களம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்ததன தந்ததன தந்ததன தந்ததனதந்ததன தந்ததனதந்ததான
பாடல் வரிகள்
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்பஞ்செனஎ ரிந்துபொடியங்கமாகிப்
பண்டறவுடன்பழைய தொண்டர்களு டன்பழகிபஞ்சவர்வி யன்பதியுடன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவகொஞ்சியசி லம்புகழல்விந்துநாதங்
கொஞ்சமயி லினற்புறமெல் வந்தருளி யென்கவலைகொன்றருள்நி றைந்தகழலின்றுதாராய்
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழலஇன்பரச கொங்கைகரமுங்கொளாமல்
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரளஇந்துநுத லும்புரளகங்குல்மேகம்
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரளஅம்பொனுரு மங்கைமணமுண்டபாலா
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்அண்டரய னும்பரவுதம்பிரானே.
