பாடல் 893
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
- தலம்
- குறட்டி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானன தனத்த தான, தானன தனத்த தானதானன தனத்த தானதனதான
பாடல் வரிகள்
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தானகோடதனில் மெத்த வீறுமுலையாலுங்
கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளாலகோலவு தரத்தி னாலுமொழியாலும்
சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்சீருறு நுசுப்பி னாலும்விலைமாதர்
சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயைசேர்தரு முளத்த னாகியுழல்வேனோ
தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்டனானராவணன் மிகுத்த தானைபொடியாகச்
சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனிதாதுறை புயத்து மாயன்மருகோனே
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாணமாபலி முதற்கொ ணாதன்முருகோனே
வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ¡£கைவாகுள குறட்டி மேவுபெருமாளே.
