பாடல் 889
முகிலைக் காரைச் சருவிய குழலது
- தலம்
- திருநெய்த்தானம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத் தானத் தனதன தனதனதனனத் தானத் தனதன தனதனதனனத் தானத் தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
முகிலைக் காரைச் சருவிய குழலதுசரியத் தாமத் தொடைவகை நெகிழ்தரமுளரிப் பூவைப் பனிமதி தனைநிகர்முகம்வேர்வ
முனையிற் காதிப் பொருகணை யினையிளவடுவைப் பானற் பரிமள நறையிதழ்முகையைப் போலச் சமர்செயு மிருவிழிகுழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்பருகிக் காதற் றுயரற வளநிறைதுணைபொற் றோளிற் குழைவுற மனமதுகளிகூரச்
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமதநிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலைதுவளக் கூடித் துயில்கினு முனதடிமறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவெனதிமிதித் தீதித் திமிதியென் முரசொடுகுழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள்களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்குவியக் கூடிக் கொடுவர அலகைகள்குணலிட் டாடிப் பசிகெட அயில்வெடுகுமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலிதிகழச் சூழத் திருநட மிடுபவர்செறிகட் காளப் பணியணி யிறையவர்தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்கலசத் தாமத் தனகிரி தழுவியதிருநெய்த் தானத் துறைபவ சுரபதிபெருமாளே.
