உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 888

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாந்த தத்தன தானா தானனதாந்த தத்தன தானா தானனதாந்த தத்தன தானா தானனதந்ததான

பாடல் வரிகள்

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலைசேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொரவேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ்உ ண்டுதோயா

வேண்டு ரைத்துகில் வேறாய் மோகனவாஞ்சை யிற்களி கூரா வாள்விழிமேம்ப டக்குழை மீதே மோதிடவண்டிராசி

ஓங்கு மைக்குழல் சாதா வீறெனவீந்து புட்குரல் கூவா வேள்கலையோர்ந்தி டப்பல க்¡£டா பேதமுயங்குமாகா

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனைதீர்ந்து னக்கெளி தாயே மாதவமூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வழங்குவாயே

தாங்கு நிற்சரர் சேனா நீதருனாங்கு ருத்ரகு மாரா கோஷணதாண்ட வற்கருள் கேகீ வாகனதுங்கவீரா

சாங்கி பற்சுகர் சீநா தீசுரரேந்த்ரன் மெச்சிய வேலா போதகசாந்த வித்தக ஸ்வாமீ நீபவலங்கன்மார்பா

பூங்கு ளத்திடை தாரா வோடனமேய்ந்த செய்ப்பதி நாதா மாமலைபோன்ற விக்ரக சூரா ¡£பகிரண்ட்ருபா

போந்த பத்தர்பொ லாநோய் போயிடவேண்ட நுக்ரக போதா மேவியபூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →