பாடல் 880
குறித்தநெஞ் சாசை விரகிகள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தனந் தான தனதனதனத்தனந் தான தனதனதனத்தனந் தான தனதனதனதான
பாடல் வரிகள்
குறித்தநெஞ் சாசை விரகிகள்நவிற்றுசங் கீத மிடறிகள்குதித்தரங் கேறு நடனிகள்எவரோடுங்
குறைப்படுங் காதல் குனகிகள்அரைப்பணங் கூறு விலையினர்கொலைக்கொடும் பார்வை நயனிகள்நகரேகை
பொறித்தசிங் கார முலையினர்வடுப்படுங் கோவை யிதழிகள்பொருட்டினந் தேடு கபடிகள்தவர்சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்உ ருக்குசம் போக சரசிகள்புணர்ச்சிகொண் டாடு மருளதுதவிர்வேனோ
நெறித்திருண் டாறு பதமலர்மணத்தபைங் கோதை வகைவகைநெகிழ்க்குமஞ் சோதி வனசரிமணவாளா
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்வளப்பெருஞ் சேனை யுடையவர்நினைக்குமென் போலு மடியவர்பெருவாழ்வே
செறித்தமந் தாரை மகிழ்புனைமிகுத்ததண் சோலை வகைவகைதியக்கியம் பேறு நதியதுபலவாறுந்
திரைக்கரங் கோலி நவமணிகொழித்திடுஞ் சாரல் வயலணிதிருக்குரங் காடு துறையுறைபெருமாளே.
