பாடல் 86
மனத்தின்பங் கெனத்தங்கைம்
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- பேகடா
- தாளம்
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2தனத்தந்தந் தனத்தந்தந்தனத்தந்தந் தனத்தந்தந்தனத்தந்தந் தனத்தந்தந்தனதானா
பாடல் வரிகள்
மனத்தின்பங் கெனத்தங்கைம்புலத்தென்றன் குணத்தஞ்சிந்த்ரியத்தம்பந் தனைச்சிந்தும்படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்திறத்தின்தண் டெடுத்தண்டங்கிழித்தின்றிங் குறத்தங்கும்பலவோரும்
எனக்கென்றிங் குனக்கேன்றங்கினத்தின்கண் கணக்கென்றென்றிளைத்தன்புங் கெடுத்தங்கங்கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்கிரக்கும்புன் றொழிற்பங்கங்கெடத்துன்பங் கழித்தின்பந்தருவாயே
கனைக்குந்தண் கடற்சங்கங்கரத்தின்கண் தரித்தெங்குங்கலக்கஞ்சிந் திடக்கண்துஞ்சிடுமாலும்
கதித்தொண்பங் கயத்தன்பண்பனைத்துங்குன் றிடச்சந்தங்களிக்குஞ்சம் புவுக்குஞ்செம்பொருளீவாய்
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்சிறுப்பெண்குங் குமக்கும்பந்திருச்செம்பொன் புயத்தென்றும்புனைவோனே
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்பொழிற்றண்செந் திலிற்றங்கும்பெருமாளே.
