உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 85

மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்த தந்தன தந்தன தந்தனதந்த தந்தன தந்தன தந்தனதந்த தந்தன தந்தன தந்தனதந்ததான

பாடல் வரிகள்

மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புருவங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்வண்டு புண்டரி கங்களை யும்பழிசிந்துபார்வை

மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழைதங்க வண்டர ளம்பதி யும்பலுமண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறுகண்டமாதர்

கஞ்சு கங்குர லுங்கழை யம்புயகொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறிகந்த சந்தன மும்பொலி யுந்துகில்வஞ்சிசேருங்

கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகுகண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடைகண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரைநம்புவேனோ

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடுடுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடுதந்த னந்தன திந்திமி சங்குகள்பொங்குதாரை

சம்பு வின்கும ரன்புல வன்பொருகந்த னென்றிடு துந்தமி யுந்துவசங்க ளங்கொளி ருங்குடை யுந்திசைவிஞ்சவேகண்

டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவடன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திடஅண்ட ரிந்திர னுஞ்சர ணம்புகவென்றவேளே

அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்அண்ட ருந்தொழு செந்திலி லின்புறுதம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →