பாடல் 851
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
- ராகம்
- ஹிந்தோளம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2தனதன தந்த தனதன தந்ததனதன தந்ததனதான
பாடல் வரிகள்
இருவினை யஞ்ச வருவினை கெஞ்சஇருள்பிணி துஞ்சமலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்கஇசைகொடு துங்கபுகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்பசிவசுத கந்தகுகவேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சுதிகழந டஞ்செய்கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டுமகிழரி விண்டுமருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்றவலம்வரு செம்பொன்மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்துமமலனு கந்தமுருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கைஅமளிந லங்கொள்பெருமாளே.
