உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 846

மலைக் கனத்தென மார்பினி லேயிரு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத் தனத்தன தானன தானனதனத் தனத்தன தானன தானனதனத் தனத்தன தானன தானனதனதான

பாடல் வரிகள்

மலைக் கனத்தென மார்பினி லேயிருமுலைக் கனத்துற வேயிடை நூலெனவளைத்து குப்பமை யார்குழல் தோளொடும்அலைமோத

மயிற் குலத்தவ ராமென நீள்கலைநெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடுமயக்கி நத்தினர் மேல்மறு பாடுமவிழியேவி

விலைக் கெனத்தன மாயிர மாயிரமுலைக்க ளப்பினு மாசைபொ தாதெனவெறுப்பர் குத்திர காரியர் வேசையர்மயல்மேலாய்

வெடுக் கெடுத்தும காபிணி மேலிடமுடக்கி வெட்கு மதாமத வீணனைமினற் பொலிப்பத மோடுற வேயருள்புரிவாயே

அலைக் கடுத்தசு ரார்பதி கோவெனவிடப் பணச்சிர மாயிர சேடனும்அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவகமயில்வீரா

அடைக் கலப்பொரு ளாமென நாயெனைஅழைத்து முத்திய தாமநு பூதியெனருட்டி ருப்புக ழோதுக வேல்மயிலருள்வோனே

சிலைக்கை முப்புர நீறெழ வேதிருவுளத்தி லற்பமெ னாநினை தேசிகர்சிறக்க முத்தமி ழாலொரு பாவகமருள்பாலா

திருக் கடப்பலர் சூடிய வார்குழல்குறத்தி கற்புட னேவிளை யாடியொர்திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →