உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 847

எருவாய் கருவாய் தனிலே யுருவா

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - ஆதிதனனா தனனா தனனா தனனாதனனா தனனாதனதான

பாடல் வரிகள்

எருவாய் கருவாய் தனிலே யுருவாயிதுவே பயிராய்விளைவாகி

இவர்போ யவரா யவர்போ யிவராயிதுவே தொடர்பாய்வெறிபோல

ஓருதா யிருதாய் பலகோ டியதாயுடனே யவமாயழியாதே

ஓருகால் முருகா பராம குமராஉ யிர்கா வெனவோதருள்தாராய்

முருகா வெனவோர் தரமோ தடியார்முடிமே லிணைதாளருள்வோனே

முநிவோ ரமரோர் முறையோ வெனவேமுதுசூ ருரமேல்விடும்வேலா

திருமால் பிரமா வறியா தவர்சீர்சிறுவா திருமால்மருகோனே

செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்திருவீ ழியில்வாழ்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →