பாடல் 84
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- ஹம்ஸாநந்தி
- தாளம்
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்த தனன தந்த தனனதந்த தனனதனதான
பாடல் வரிகள்
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்வந்து கதறவுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்வஞ்ச மொழியவிழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவவெம்பி யிடறுமொருபாச
விஞ்சை விளைவு மன்று னடிமைவென்றி யடிகள்தொழவாராய்
சிங்க முழுவை தங்கு மடவிசென்று மறமினுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழுசெந்தி லுறையுமுருகோனே
எங்கு மிலகு திங்கள் கமலமென்று புகலுமுகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையுமென்று மிளையபெருமாளே.
