பாடல் 833
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
- தலம்
- எட்டிகுடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதத்த தனதத்த தனதத்த தனதத்ததனதத்த தனதத்ததனதானா
பாடல் வரிகள்
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்தகயலொத்த மலரொத்தவிழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்புகதிர்முத்து முலைதைக்கஅகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்றுமிடிபட்டு மடிபட்டுமனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தைமிகநட்பொ டருள்தற்குவருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்றதலைபத்து டையதுட்டனுயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றிதருசக்ர தரனுக்குமருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்தசிவனுக்கு விழியொத்தபுதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்றதிகழெட்டி குடியுற்றபெருமாளே.
